மும்பையின் மஹிம் ரயில் நிலையத்தில் பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் அரை நிர்வாணமாக ஒருவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த இடத்திற்கு உள்ளூர் ரயில் ஒன்று வந்த நிலையில் அந்த நபர் ரயிலை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். ரயிலின் லோக்கோ பைலட் மற்றும் அங்கிருந்த பயணிகள் அவரை எச்சரித்தும் அந்த நபர், தொடர்ந்து அட்டகாசம் செய்துள்ளார். இதன் காரணமாக ரயில் சில நிமிடங்கள் அதே நடைமேடையில் நின்றுக்கொண்டு இருந்துள்ளது. இதனால், அந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.