தென் ஆப்ரிக்காவில் உள்ள சல்டானாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஒரு விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விமானியை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.