IPL 2025 18வது சீசனில் இரண்டாவது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கையில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.