தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு கொடுத்துள்ளார். அதன்படி, தவெக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.