
தக்கலை: இரும்பு பொருள்கள் திருடிய 3 பேர் கைது
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் சந்திப்பு பகுதியில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு குழித்துறையை சேர்ந்த பால்ராஜ் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள பழைய இரும்பு பொருட்களை வெட்டி எடுத்து செல்வதாக கட்டிடத்தின் மேலாளர் செங்கோடியை சேர்ந்த மோகன் ராஜன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தக்கலை போலீசில் பால்ராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்றதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் பால்ராஜ் (56), பத்மநாபபுரத்தை சேர்ந்த நமசிவாயம் (48, சிதரால் பகுதியை சேர்ந்த மங்கள ராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து இரும்பு பொருட்கள் வெட்டி எடுக்க கொண்டு வந்த ஜெனரேட்டர், மினி டெம்போ ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.