சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் 3வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிகின்றனர். இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத், போட்டி நடைபெறும் மைதானத்தில் பாடல்கள் பாடினார். அதி, ஜெயிலர், லியோ உள்ளிட்ட பாடல்களை பாடினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.