அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா - இபிஎஸ் கொடுத்த விளக்கம்

52பார்த்தது
சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை சேர்த்துக்கொள்ளும்படி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இபிஎஸ், “நீங்களாக காது, மூக்கு, கண்ணு வைத்து செய்தியை எழுதாதீர்கள். திரும்ப திரும்ப அதற்கு பதில் சொல்லியாச்சு. 100 சதவீதம் அவர்களை கட்சியில் இணைக்கப்போவது கிடையாது” என்றார்.

நன்றி: நியூஸ்18 தமிழ்

தொடர்புடைய செய்தி