மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை.. அதிரடி காட்டிய உணவுப் பாதுகாப்புத்துறை

82பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்கள் கெடாமல் இருப்பதற்காகவும், பார்ப்பதற்கு பளபளவென தோற்றும் காட்டுவதற்காகவும் மெழுகு பூசப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள், கெட்டுப்போன ஆப்பிள்களை அதிகாரிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி