தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் குமார், கடந்த சில மாதங்களாகவே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வந்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து. இந்நிலையில், இன்று ITALY யில் நடந்த 12H OF MUGELLO CAR பந்தயத்தில் GT992 பிரிவில் அஜித் அணி 3-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனையடுத்து போடியத்தில் ஏறி வெற்றி பரிசை வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.