பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் சுர்பிராஜ், தனது அறையில், 7 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு முதலுதவி கொடுத்த ஊழியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.