கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கும்பகோனத்தில் இருந்து நிச்சயதார்த்தத்திற்காக காஞ்சிபுரம் நோக்கி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, உளுந்தூர்பேட்டை அருகே திடீரென டயர் வெடித்ததில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அருகில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.