சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான 3வது ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துவருகிறது. அந்த வகையில், ரோஹித் (0), ரியான் ரிக்கல்டன் (13), வில் ஜேக்ஸ் (11), சூரியகுமார் (29), ராபின் மிஸ் (3), திலக் வர்மா (31) ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்துள்ளனர். மும்பை அணி, 13 வது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.