கன்னியாகுமரியில் 16 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் குடிநீர் குழாய்கள் உடைந்து திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். தினசரி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.