நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

79பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கை மனு கொடுக்க சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரை உதாசீனப்படுத்தி கைது செய்ய உத்தரவிட்ட பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க குமரி மாவட்ட தலைவர் பரீத்தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் பிரான்சிஸ் சேவியர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலச் செயலாளர் மைக்கேல் லில்லி புஷ்பம் கண்டன உரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி