நித்திரவிளை: அடையாளம் தெரியாது வாகனம் மோதி மூதாட்டி காயம்

76பார்த்தது
நித்திரவிளை: அடையாளம் தெரியாது வாகனம் மோதி மூதாட்டி காயம்
நித்திரவிளை அருகே கொல்லால் பகுதியை சேர்ந்தவர் ரோசம்மாள் (75). நேற்று மதியம் அந்த பகுதியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர்  மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

       அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியை  மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ரோசம்மாள் படுகாயம் அடைந்தார். அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் மூதாட்டியை மோதி தள்ளிய வாகனம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி