உத்திரமேரூர் - Uthiramerur

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 178 கோடி கடன் உதவி

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 178 கோடி கடன் உதவி

தமிழகம் முழுதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனுதவிகளை, அமைச்சர் உதயநிதி, மதுரையில் நேற்று(செப்.11) துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: ஊரக, நகர்ப்புற பகுதிகளில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், பெண்களை ஒன்றிணைத்து சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், பண்ணை சாரா தொழில்களுக்கு கடனுதவி வழங்கல், உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 58 கோடி ரூபாய்க்கு, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,451 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய, 37.3 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், 18,090 பெண்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13,515 விவசாயிகள் வாங்கிய 89.4 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా