உத்திரமேரூர் - Uthiramerur

செங்கல்பட்டு: தமிழறிஞர்கள் உதவித்தொகை; விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு: தமிழறிஞர்கள் உதவித்தொகை; விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு மாவட்ட தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத்திறம் கொண்ட அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமை காலத்திலும் பொருள் வறுமை தமிழ் தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம், மாதந்தோறும் 3, 500 ரூபாயும், மருத்துவப்படி 500 என, மொத்தம் 4, 000 ரூபாய் வழங்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படுகிறது. 2024- - 25ம் ஆண்டிற்கு, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా