உத்திரமேரூர் ஸ்ரீதிரவுபதி அம்மன் அலைய மகாபாரத தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி. நூற்று கணக்கானோர் கண்டு சாமி தரிசனம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபாரத விழா நடைபெறுவது வழக்கம்.
சுமார் ஒரு மாதம் நடைபெரும் இந்த விழாவில் மகாபாரத சொற்பொழிவு, மகாபாரத கூத்து நாடகம், தவசு மரம் ஏறுதல், துரியோதனன் படுகளம், தீமிதி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று தவசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் நூறு அடி உயரம் கொண்ட தவசு மரத்தில் நாடக கலைஞர்கள் ஏறி மகாபாரத நிகழ்வுகளை தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினார்.
இதில் குழந்தை இல்லாத பெண்கள், புதிதாக திருமணம் ஆன பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு தவசு மரத்தில் ஏறிய நாடக கலைஞர் எலும்பிச்ச பழங்களை வீசினார். அதனை பெண்கள் தங்களது முந்தானையால் பிடித்து கோவிலுக்கு சென்று மனமுவந்து வேண்டுதல் செய்தனர்.
இந்த விழாவில் உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளிலை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.