உத்திரமேரூர் ஒன்றியத்தில், 371 பயனாளிகளுக்கு, 12. 98 கோடி ரூபாயில் இலவச வீடு கட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்ட, ஒரு வீட்டிற்கு 3. 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக, சில மாதங்களாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்தன.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், 371 பயனாளிகளுக்கு, 12 கோடியே 98 லட்சம் ரூபாயில் வீடு கட்ட நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. இதேபோன்று, பல ஆண்டுகளுக்கு முன் கட்டி சேதமடைந்த இந்திரா காந்தி நினைவு தொகுப்பு வீடுகள் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் திட்ட வீடுகள் பழுது பார்க்க உத்திரமேரூர் ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக உத்திமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 427 பயனாளிகளுக்கு நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. உத்திரமேரூர் பி. டி. ஒ. , அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். பி. , செல்வம், உத்திரமேரூர் தி. மு. க. , - எம். எல். ஏ. , சுந்தர் ஆகியோர் பங்கேற்று பணி ஆணை வழங்கினர்.
உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமாவதி, துணை தலைவர் வசந்தி மற்றும் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.