செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய அவை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏ வுமான சுந்தர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு ஒன்றிய துணை செயலாளர் தாமோதரன் மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து மாவட்ட மீனவரணி செயலாளர் கயல் மாரிமுத்து உட்பட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.