காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில் 23 கல் குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 முதல் 400 அடி ஆழம் உடையவை. கைவிடப்பட்ட இந்த கல் குவாரி குட்டைகளில், ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கடந்த 2016 -17ல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் வறண்டன. இதனால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, சிக்கராயபுரத்தில் உள்ள 23 கல்குவாரிகளையும் ஒருங்கிணைத்து, 210 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022ல் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவும், இதை உறுதிப்படுத்தினார். ஆனால், நீர்த்தேக்கம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.