போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.

55பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிர்ப்பான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு ஜெய்சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. செல்வி, வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல் துறையினருடன் வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரை 250கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திஏந்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி