மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற தாசில்தார் உத்தரவு

64பார்த்தது
மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற தாசில்தார்  உத்தரவு
மாமல்லபுரத்தில், ஆக்கிரமிப்பு கடைகளால் சாலைகள் குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. அதனால், வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் குவியும் நிலையில், குறுகிய சாலைகளில் நெரிசல் அதிகரிக்கிறது.

இதுகுறித்து, தாசில்தார் ராதா, சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், தொல்லியல் அலுவலர் ஸ்ரீதர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நெடுஞ்சாலை சாலை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோருடன், சப் - கலெக்டர் நாராயணசர்மா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில், மாமல்லபுரம் நகர்ப்பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நாட்களை இறுதி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி