செங்கல்பட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

84பார்த்தது
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 8 ஆம் தேதி அடுத்த 7 நாட்கள் வரை தமிழகத்தில ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுனும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், புலிப்பாக்கம், பரநூர் , வீராபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும்

புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் பொத்தேரி கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது வருகிறது

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்பொழுது மழை பெய்வதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் வீசுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி