உத்திரமேரூர் - Uthiramerur

காஞ்சியில் சழுதாய கழிப்பறை சீரமைக்க எதிர்பார்ப்பு

காஞ்சியில் சழுதாய கழிப்பறை சீரமைக்க எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளத்தில், சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூரில் இருந்தும், வெளியூரில் இருந்தும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை வசதி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், துய்மை பாரத இயக்கம் 2021-22ன் திட்டத்தின் கீழ், கோவில் அருகில் சமுதாய கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை அசுத்தமடைந்து, துர்நாற்றம் வீசுவதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இந்நிலையில், அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவிலில் வரும் 13ல், சித்ரா பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். பக்தர்களின் நலன் கருதி, பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கழிப்பறையை முறையாக பராமரிக்க ஊழியர்களை நியமிக்கவும் அய்யங்கார்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా