செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பி. எம் டபுல்யூ கார் தொழிற்சாலை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 6 ஆம் தேதி மகேந்திராசிட்டியில் உள்ள BMW தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தொழிற்சாலையில் புதிய கார் உற்பத்தி செய்யும் போது தொழிலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் தொழிலாளர்களிடம் தகவல் தெரிவிக்காமலும் அனுமதி பெறாமல் புதிய கார் உற்பத்தி செய்யக்கூடாது என கடந்த ஆறாம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது கார் உதிபாகங்களை தயாரிக்கும் போது 20 நிமிடங்களாக இருந்ததை 14 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது யாரை கேட்டு
தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கும் கட்டுபாடுகளை தொழிலாளர்கள் பின்பற்ற முடியாது ஆறாம் தேதி தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கையெப்பம் இட மறுத்ததால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை உள்ள அனுமதிக்கவில்லை இதனால் செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள BMW தொழிற்சாலை வளாகத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.