வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்

83பார்த்தது
வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து புழுதிவாக்கம், நெல்வாய் கூட்டுச்சாலை, உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சாலையின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.


இதில், மதுராந்தகத்திலிருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலை வரையிலான இடைப்பட்ட துாரத்தில் நான்கு வேகத்தடைகள் உள்ளன. இந்த, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாமலும் உள்ளது.


மேலும், பகல் மற்றும் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், புதிதாக சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.


எனவே, வேகத்தடை உள்ள பகுதிகளில், எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி