காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், 260 பயனாளிகளுக்கு ரூ. 2, 22, 08, 007/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் ஆகியோர் வழங்கினார்கள்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசிய போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் 14. 06. 2024 முதல் நடைபெற்று வருகிறது. வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தீர்வு காணப்பட்டு, இலவச வீட்டுமனை பட்டா 170 பயனாளிகளுக்கு, முழுபுலம் பட்டா 42 பயனாளிகளுக்கு, உட்பிரிவு பட்டா 9 பயனாளிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தேய்ப்பு பெட்டி 3 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டம் மூலமாக 11 பயனாளிகளுக்கு, வேளாண்மை துறை மூலமாக 10 பயனாளிகளுக்கு, வட்டார வழங்கல் அலுவலகம் மூலமாக (TSO) 15 பயனாளிகளுக்கு வழங்கபட்டுள்ளது என்று கூறினார்.