புதுப்பட்டினத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒன்றிய செயலாளர் சேஷாத்திரி.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே மறைந்த தேமுதிக நிறுவனர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டதுடன், ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு வழங்கியும் கிழக்கு கடற்கரை சாலையில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பிரகாசம் ஒன்றிய பொருளாளர் அஜீஸ் ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.