பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சந்தை திடலில் வாரச்சந்தை நடைபெருவது வழக்கம் இன்று நடைபெற்ற வார சந்தையில், பென்னாகரம் பேரூராட்சி அலுவலர்கள் சின்னசாமி, வெங்கடேசன், மகாலிங்கம் ஆகியோர் வாரச்சந்தையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனரா என்பதனை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறும் மஞ்சள் பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.