பென்னாகரம் - Pennagaram

தர்மபுரி: ஒகேனக்கல்லில் 5000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சிகள் அமைந்துள்ளது. ஓகேனக்கல் காவிரி ஆறு கடந்த சில தினங்களாக வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் காரணமாகவும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் காரணமாகவும் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் தினசரி நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 3000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மார்ச் 27 இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலு மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


தர்மபுரி
Mar 28, 2025, 02:03 IST/பாப்பிரெட்டிபட்டி
பாப்பிரெட்டிபட்டி

தர்மபுரி: திமுக சார்பில் முஸ்லிம்களுக்கு அரிசி தொகுப்பு

Mar 28, 2025, 02:03 IST
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரிசி தொகுப்பு வழங்கும் விழா நேற்று மாலை கடத்தூரில் நடந்தது. கடத்தூர் பேரூராட்சி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அ. சத்தியமூர்த்தி, கடத்தூர் பேரூராட்சி தலைவர் கு. மணி, மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர். சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு அரிசி தொகுப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து ஒடசல்பட்டி கூட்டுரோடு, கிருஷ்ணாபுரம் சிந்தல்பாடி, தாளநத்தம், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிசி தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.