வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கிய காவலர்கள்

69பார்த்தது
இன்று காந்தியை ஜெயந்தி மற்றும் தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 60 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி இன்று தருமபுரி நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காந்தி பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், கதர் ஆடையை அணிவித்தும், தருமபுரி உதயமான தினத்தை நினைவு கூறும் வகையில் நெல்லிக்கனிகளையும் மற்றும் ஸ்வீட்களை நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னசாமி, ரகு, சதீஷ்குமார், கோமதி மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சுபாஷ், நற்சுவை ஆர். சுகுமார், கதர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி