மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

54பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு, தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி, பிரபுவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2012- ம் ஆண்டு ஜூன் மாதம் 23- ந் தேதி பிரபுவுக்கும், நந்தினிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரபு மனைவி நந்தினி மீது மண் எண்ணெயை ஊற்றிதீ வைத் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நந்தினி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று செப்டம்பர் 19 தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் பிரபுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 3000 ரூபாய் பணம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி