பாமக கனவு பலிக்காது.. தர்மபுரி எம்பி பேட்டி

78பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளான ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, கொப்பளூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 22) மாலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தர்மபுரி எம்பி ஆ. மணி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அக்டோபர் 4ஆம் தேதி ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற கோரி கடையடைப்பு நடத்துவதாக பாமக கூறியிருந்த நிலையில் அதற்கு தர்மபுரி எம்பி மணி 4 எம்எல்ஏக்கலை வைத்துக் கொண்டு இந்த நாட்டை ஆள முடியுமா, அல்லது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்றும், மக்கள் சிந்தித்துப் பார்த்தால் அடுத்த முறை பூஜ்ஜியம் என்றும், தேர்தல் நேரங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பாமகவை இனிமேல் நம்பதேவையில்லை என சாடினார்.

மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 2026 க்குள் தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவார். இதேபோல் ஏரிகளுக்கு உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றித் தர அமைச்சர்களிடம் கூறியுள்ளோம். அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர்கள் மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர் ராட்சச குழாய்கள் மூலம் ஏரியில் நிரப்பப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர். பாமக கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் பாமகவை விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி