ஒகேனக்கல்லில் 13000 கன அடியாக நீர்வரத்து உயர்வு

51பார்த்தது
தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பொழிந்து வருவதால். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று (செப்.,30) இரவு 7 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து இன்று (அக்.,1)அதிகாலை வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி