எம்எல்ஏக்கள் தலைமையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

79பார்த்தது
தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம் நிறுவற்ற வலியுறுத்தி வருகின்ற 4 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தர்மபுரி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறுவது குறித்து பாமக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தலைமையில் இன்று செப்டம்பர் 23 நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி. மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம். ஆகியோர் முன்னில வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி சிறப்புரையாற்றினார் இதில் வருகின்ற 4 தேதி தர்மபுரி மாவட்டம் முழுவதும் காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் அதற்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதியில் வணிகர் சங்கம் கடைகளில் பொது மக்களிடமும் துண்டறிக்கைகளை வழங்க வேண்டும் அனைத்து கடை உரிமையாளர்கள் வணிகர் சங்கம் வர்த்தகர் சங்கம் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்று பொறுப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி