பென்னாகரம் - Pennagaram

தர்மபுரி: தற்காலிக பட்டாசு கடைகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி: தற்காலிக பட்டாசு கடைகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று அக்டோபர் 07, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க இணையதளம் மூலம் நேரடியாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இணையவழி அல்லாமல் அனுப்பப்படும் விண்ணப் பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. பட்டாசு கடைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில், விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தர்மபுரி