ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, மற்றும் தை அமாவாசை, நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. நேற்று (அக்டோபர் 02) தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.
அப்போது காவிரி கரையில் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஏளமான பொதுமக்கள் குவிந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.