இண்டூரில் திமுக சார்பில் தமிழ் மாணவர் மன்றம் துவக்கம்

57பார்த்தது
தமிழக முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒன்றித்து தமிழ் மாணவர் மன்றம் துவங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக மாணவர் அணிக்கு உத்தரவிட்டிருந்தார் இதனை அடுத்து தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இந்து சென்றாய பெருமாள் கல்வியில் கல்லூரியில் முதல் முறையாக தமிழ் மாணவர் மன்றத்தின் துவக்க விழா நேற்று செப்டம்பர் 25 மாலை கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணன் தலைமையில் கல்லூரி முன்பு தமிழகத்திலேயே முதல் முதலாக தமிழ் மாணவர் மன்றத்தின் என்ற வாசகங்கள் அடங்கிய புதிய கொடியை மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழரசன் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் ஏற்றினார்.

மேலும் இதற்கு அடையாளமாக புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தரணம் சுப்பிரமணி மற்றும் மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அன்பரசு கௌதம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி