தருமபுரியில் சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான தினத்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடு முழுவதும் சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான தினத்தை ஒட்டி 23. 09. 2024 முதல் 27. 09. 2024 வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து சைகைமொழி விழிப்புணர்வு பேரணியினை இன்று (24. 09. 2024) மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலக்கியம்பட்டி செந்தில் நகர் பஸ் நிலையம் வரை சென்றது. இப்பேரணியில் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள் என சுமார் 300 பேர் பங்கேற்றனர்.