லேசான காயத்துடன் உயிர் தப்பினேன் - பிரியங்கா மோகன்

70பார்த்தது
லேசான காயத்துடன் உயிர் தப்பினேன் - பிரியங்கா மோகன்
லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக நடிகை பிரியங்கா மோகன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேடை சரிந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். விபத்தில் சிக்கிய பின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்தார். தெலங்கானாவின், டொரூர் பகுதியில் பிரியங்கா மோகன் பங்கேற்ற வணிக வளாக திறப்பு விழா நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்தது. இதில் நூலிழையில் விபத்தில் இருந்து பிரியங்கா மோகன் தப்பினார்.

தொடர்புடைய செய்தி