தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பாக இன்று (செப்டம்பர் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாபு சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்புரையாற்றினார். முன்னிலை மாதேசன், மாநில துணைத்தலைவர். விகற்பகம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வாழ்த்துரை வழங்கினர். தங்கவேல் மாவட்ட சட்ட செயலாளர், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிங்காரவேலன், மாவட்ட துணை தலைவர் சம்பத்குமார், வையாபுரி பச்சையப்பன், மாநில செயற்குழு தலைவர் கமலேசன், மாவட்ட இணை செயலாளர் பழனி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ராணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளக்கவுரையாக மாநில சிறப்பு தலைவர் பொன்முடி சிறப்புரை ஆற்றினார். இதில், கடந்த ஒரு ஆண்டாக சிறு சிறு பிரச்சனைகளை காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், இடமாறுதல் செய்வதைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் நன்றி உரை வழங்கினார்.