தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆடுகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுகிறது இன்று செப்டம்பர் 29 காலை கூடிய சந்தையில் கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க & வாங்க வந்திருந்தனர். ஆடுகளின் தரம் & ரகத்தை பொறுத்து 3000 ரூபாய் முதல் 20000 ருபாய் வரை விற்பனையானது மேலும் இன்று 5 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது. புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் வரத்து சரிந்து விலை அதிகரித்தது மேலும் விற்பனை மந்தமாக காணப்பட்டது.