மறியலில் ஈடுபட்ட பாமகவினர் மீது வழக்குப் பதிவு

66பார்த்தது
பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ச் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொண்டனர். அந்த நேரம் பாமகவை சேர்ந்த சிலர் அங்கு வந்து, அவர்களை அழைக்காதது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாமகவினர் திடீரென பென்னாகரம் பேருந்து நிலையம் முன்புறம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பென்னாகரம் காவலர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட பாமகவை சேர்ந்த மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், இளைஞரணி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷண்ணன் உள்பட 20 பேர் மீது நேற்று (செப்டம்பர் 23) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி