ஒகேனக்கலில் மீன் குஞ்சுகள் விடும் விழா

75பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மீன் விதை பண்ணைகளிலும், சேலம் மாவட்ட விதைப் பண்ணையில் இருந்து கட்லா, ரோகு, மிருகால், சேவல் கெண்டை, கல்பாசு, உள்ளிட்ட 5 ரக மின் குஞ்சுகள் என 1. 50 லட்சம் மீன் குஞ்சுகள் ஒரு அங்குலம் அளவிற்கு வளர்க்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 1. 50 லட்சம், மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக எம்பி ஆ. மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டு துவங்கி வைத்தனர்.

மேலும் 2 லட்சம் மீன் குஞ்சுகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 29ம் தேதிக்குள் ஒகேனக்கல் ஆற்றில் விடப்படும் எனவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகளும் தென்பெண்ணை ஆற்றல் 2 லட்சம் மின் குஞ்சுகளும் விடப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் கோகுல், ரமணன், மற்றும் ஊரகத் துறை அலுவலர்கள் வருவாய் துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி