ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

சிவகாசி: 2026 ல் அதிமுக வலுவான கூட்டணி - முன்னாள் அமைச்சர்

வலுவான கூட்டணி அமைத்து 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூளுரைத்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்: - தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலைகளும் கூடுதலாகி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் உயர்ந்துள்ளது. பட்டாசு தொழிலில் உழைத்து சம்பாதித்த பணத்தை, வருமானத்தை மீறிய செலவு இருப்பதால் நல்ல முறையில் முதலீடு செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியின் போதெல்லாம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகம் உயர்வுக்கு காரணமாய் இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எவ்வளவோ போராடினோம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வலிமை கொண்ட துணிவுள்ள கட்சியாக அதிமுக உருவெடுத்து ஜெயிக்கும். தற்போது ஆட்சி எல்லாம் காட்சியாகிவிட்டது. விளம்பரத்தால் உயர்ந்தது என்றும் நிரந்தரம் அல்ல. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை, தீப்பெட்டி பட்டாசு தொழில் உள்பட அனைத்து தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். கூட்டத்திற்கு நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 16, 2024, 15:09 IST/திருச்சுழி
திருச்சுழி

விடுதி வசதி வழங்க கோரி மாணவிகள் மனு

Sep 16, 2024, 15:09 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங் போர்டில் அரசுக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் மதுரை, தேனி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகள் இகு வந்து தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியில் தங்கும் விடுதி வசதி இல்லாததால் அருகிலுள்ள சாட்சியாபுரத்தில் உள்ள ஆதி திராவிட நலத் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் தங்களுக்கு போதுமான பாத்ரூம் வசதி மற்றும் இட வசதி இல்லை என்றும் மேலும் ஒரே அறையில் அதிகம் பேர் தங்குவதால் தங்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இது சம்மந்தமாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரிடம் பலமுறை பு கார் மனு அளித்தும் அவர் அந்தப் புகாரை உதாசினபடுத்துவதாகவும், மேலும் தங்களை கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் தங்களுக்கு உரிய தங்குமிட வசதி செய்து தர வேண்டும் என்று கூறி அரசு மற்றும் கலைக் கல்லூரியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.