விருதுநகர் மவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலாகும். மேலும் கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று( செப்.2 ) ஆவணி மாத அமாவாசைய முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.
பின்பு காலை 6 மணி அளவில் சதுரகிரி கோயில் நுழைவு வாயில் கேட் திறக்கப்பட்ட நிலையில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.
மேலும் திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.