ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊருக்குள்ளே உலா வரும் வன விலங்குகள்...

60பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரிசையாக அடிவாரப் பகுதிக்கு கீழே இறங்கிய யானைகள் கூட்டம். உஷார் நிலையில் வனத்துறையினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரிசையாக அடிவாரப்பகுதிக்கு யானைகள் கூடத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் விரட்டி உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மாலை நேரத்தில் வரிசையாக 5க்கும் மேற்பட்ட யானைகள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்த யானைகள் இரவு வரை காத்திருந்து பல்வேறு தோப்புகள் வழியாக வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் நின்றன இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் டிரோன்கள் உதவியுடன் யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டி உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் பல்வேறு பகுதியில் யானைகள் வரும்போது பல்வேறு விவசாய நிலங்களில் சிறு சிறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின் படி யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம், அதன் அடிப்படையில் தொடர்ந்து யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர் வனத்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி