ஸ்ரீவி: இறந்த இராணுவ வீரர் உடலுக்கு இறுதி ஆட்சியர் மரியாதை...

55பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்துக்குள்ளான ராணுவ வீரரின் உடல் அவரத சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம். மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர்,    ஹரியானா மற்றும் தமிழகம் என 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுபேதர் கே. தங்கபாண்டியனும் உயிரிழந்தார். விபத்தில்  உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுபேதர் தங்கப்பாண்டி வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தை  சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பணியில்சேர்ந்துள்ளார். உயிரிழந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டிக்கு வளர்மதி என்ற மனைவியும், 6 மற்றும் 8 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த தங்கபாண்டியன் உடல் நேற்று இரவு அவர் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தங்கபாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், தாசில்தார் சரஸ்வதி, ஸ்ரீவில்லிபுத்தூர் டிஸ்பி ராஜா, ராணுவ அதிகாரி ரோகித் கோர் உள்ளிட்ட பலஅரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்பு 21 குண்டுகள் முழங்க தங்கப்பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி