ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: ஆக்கிரமிப்பை அகற்ற MLA, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற MLA, பொதுமக்கள் எதிர்ப்பு. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வன்னியம்பட்டி காயல்குடி ஆற்றில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த சைக்கிள் நிறுத்துமிடம், கடை, சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளதாக வருவாய் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்த போது பள்ளி மற்றும் தனி நபர்கள் காயல்குடி ஆற்றின் மீது சைக்கிள்ஸ்டாண்ட், கடை கழிப்பறை, இறுதி சடங்கு செய்யும் இடம் என கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றுவதற்காக வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்த போது, அளவு டேப்பை பறித்தும், மின் இணைப்பை துண்டிக்க விடாமல் சுற்றி நின்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கு ஆதரவாக ராஜபாளையம் MLA தங்கபாண்டியன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக MLA தெரிவித்ததை அடுத்து, 3 நாட்கள் அவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்